Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் இதுவரை ரூபாய் 2.5 கோடி பறிமுதல் எனத் தகவல்!

தமிழ்நாட்டில் இதுவரை ரூபாய் 2.5 கோடி பறிமுதல் எனத் தகவல்!

-

 

தமிழ்நாட்டில் இதுவரை ரூபாய் 2.5 கோடி பறிமுதல் எனத் தகவல்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ரூபாய் 2.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதியை கடந்த சனிக்கிழமை அன்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மூன்று பறக்கும் படைகள் என 702 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை யானைக்கவுனி பகுதியில் நேற்று முன்தினம் 1.43 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், கடலூர் மாவட்டம் வேப்பூரில் 2.5 லட்சம் ரூபாய், நாகையில் 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தவெக தலைவராக கேரள மக்களை சந்திக்கும் விஜய்!

ஆவடியில் ரூபாய் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மருந்துகள் சிக்கினர். இந்த நிலையில், மாநிலம் முழுவதும் நேற்று (மார்ச் 17) வரை 2.5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

MUST READ