Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக ரயில்வே திட்டங்கள்- நிதி எவ்வளவு?

தமிழக ரயில்வே திட்டங்கள்- நிதி எவ்வளவு?

-

 

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில் – திடீர் பிரேக்காள் இருவர் பலி.!
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில் – திடீர் பிரேக்காள் இருவர் பலி.!

இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே மேம்பாட்டிற்காக 2.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்காக ரூபாய் 6,331 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அதன்படி, சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் வரை ரயில் பாதை அமைக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டிவனம்- நகரி இடையிலான 180 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க 350 கோடி ரூபாயும், மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான ரயில் பாதைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை இடையிலான 70 கி.மீ. ரயில்வே திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, காரைக்குடி, திருத்துறைப்பூண்டி, அகஸ்தியம்பள்ளி, மன்னார்குடி ரயில் பாதை மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

அதுமட்டுமின்றி, செங்கல்பட்டு- விழுப்புரம் இடையே 103 கி.மீ. மின்மயமாக்கலுடன் மூன்றாவது ரயில் பாதை அமைக்க, 101 கோடி ரூபாயும், மொரப்பூர்- தருமபுரி ரயில்வே திட்டத்திற்கு 115 கோடி ரூபாயும், திருச்சி- நாகூர்- காரைக்கால் திட்டத்திற்கு 150 கோடி ரூபாயும் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

MUST READ