தமிழகத்தில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிவன் கோயில்களில் விடிய விடிய நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மீண்டும் இணையும் பிரபுதேவா – வடிவேலு காம்போ…ஷூட்டிங் எப்போது?
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தி பாடல்கள், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, லிங்கத்திற்கு சிறப்பே அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் அஜித்!
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் கோயில் மற்றும் பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் குவிந்தனர். மேலும், பாளையங்கோட்டையில் உள்ள மைதானத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆன்மீக சொற்பொழிவு, பரதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் 100- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், பூஜைகள் நடைபெற்றன.