Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு"- தேர்தல் ஆணையம் தகவல்!

“தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு”- தேர்தல் ஆணையம் தகவல்!

-

 

"தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு"- தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) காலை 09.00 மணி நிலவரப்படி, 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்!

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 15.10% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59% வாக்குகளும் பதிவாகியுள்ளது. திருவள்ளூர்- 12.31%, வடசென்னை 9.73%, தென் சென்னை- 10.08%, ஸ்ரீபெரும்புதூர்- 11.18%, காஞ்சிபுரம்- 12.25%, அரக்கோணம்- 12.64%, வேலூர்- 12.76%, கிருஷ்ணகிரி- 12.57%, தருமபுரி- 15.04%, திருவண்ணாமலை-12.80%, ஆரணி- 12.69%, விழுப்புரம்- 13.97%, சேலம் 14.79%, நாமக்கல்- 14.36%, ஈரோடு- 13.37%, திருப்பூர்- 13.13%, நீலகிரி- 12.18%, கோவை- 12.16%, பொள்ளாச்சி- 13.36%, திண்டுக்கல்- 13.16%, கரூர்- 14.41%, திருச்சி- 11.82%, பெரம்பலூர்- 14.35%, கடலூர்- 12.22%, சிதம்பரம்- 12.90%, மயிலாடுதுறை- 12.08%, நாகை- 12.98%, தஞ்சை- 12.91% வாக்குகள் பதிவாகியுள்ளது.

சேலத்தில் வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர், துணை ராணுவப்படையினர், ரிசர்வ் போலீசார் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ