spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது

இன்ஸ்டாவில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண் கைது

-

- Advertisement -

ஆயுதங்களுடன் வீடியோ விவகாரம் – பெண் கைது

கோவையில் பட்டாகத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளம்பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், “பிரண்ட்ஸ் கால் மி தமன்னா” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளார். அவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்பிடித்தவாறு பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டார். அதில் “எதிரி போட நினைத்தால், அவனை போடும் ஓடுனா கால வெட்டுவோம்” என்ற வன்முறையை தூண்டும் வகையிலான பாடலுடன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. அதுமட்டுமின்றி அந்த பெண்ணுக்கு கொலையாளிகள் சிலருடன் இன்ஸ்டாவில் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

we-r-hiring

இந்நிலையில் மாநகர போலீசார் இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் அவரை பிடிக்க மாநகர போலீசார் தனிப்படையையும் அமைத்தனர். இந்நிலையில் சம்பந்தபட்ட்ட பெண், சங்ககிரியில் இருந்ததை அறிந்த தனிப்படை அங்கு சென்று அவரையும், சண்முகம் என்பவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக இளம் பெண்ணை காவல்துறையினர் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக சம்பந்தபட்ட வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டதாக மாணவி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

MUST READ