Homeசெய்திகள்தமிழ்நாடுஎண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட சாமானிய மக்கள் மீது சுமை - TTV.தினகரன் ஆவேசம்!

எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட சாமானிய மக்கள் மீது சுமை – TTV.தினகரன் ஆவேசம்!

-

- Advertisement -

சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் மத்திய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு – பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என அமமக கட்சியின் பொதுச் செயலாளா் TTV.தினகரன் கூறியுள்ளாா்.

எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்ட சாமானிய மக்களை மீது சுமை - TTV.தினகரன் ஆவேசம்!

இது குறித்து அவா் தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்ற திமுகவின் வாக்குறுதி தற்போது வரை நிறைவேற்றப்படாத நிலையில், இந்த நான்காண்டு கால ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வாலும், பன்மடங்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தாலும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியிருக்கும் சாமானிய மக்களின் மீது கூடுதல் சுமையை ஏற்றும் வகையில் இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்துள்ளது.

எனவே, ஏழை, எளிய மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் இது போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளாா்.

மோடியின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி அல்ல – செல்வப்பெருந்தகை தாக்கு

MUST READ