spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்

பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்

-

- Advertisement -

பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்

மீன்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால் ஏப்ரல் பதினைந்து முதல் ஜூன் பதினைந்து வரை விசைப்படகுகள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் ஆழமில்லாத கடற்பகுதிக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் சடலம்
மீனவர் குமார்

 இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில்  கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள சேதுபாவாசத்திரம், அண்ணா நகர் புதுத்தெருவில் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த விஜயரத்தினம் மகன் குமார் (47) புதன்கிழமை அதிகாலை இரண்டு  மணிக்கு அண்ணா நகர் புதுத்தெரு பகுதியிலிருந்து ஒரு நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது சுமார் மூன்று நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கடலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

we-r-hiring

17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த பிரவீன்குமார்

குமார் கடலில் மிதந்ததைப் பார்த்த அருகிலேயே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அவரை மீட்டு அதிகாலை நான்கு மணிக்கு கடற்கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது அவர் இறந்து விட்டார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து  சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இறந்துப் போன மீனவர் குமாருக்கு அஞ்சம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். பிழைப்பை நோக்கி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் குமார் சடலமாக கரைக்கு கொண்டுவரப்பட்டதால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

 

MUST READ