Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் முடிந்துவிட்டது; 40/40 வாய்பில்லை - திமுக என்ன செய்ய போகிறது?

தேர்தல் முடிந்துவிட்டது; 40/40 வாய்பில்லை – திமுக என்ன செய்ய போகிறது?

-

18 வது மக்களவைக்கான முதல் கட்ட தேர்தல் முடிந்துவிட்டது. ஜூன் 4ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் ரிசல்டுக்கு பின்னர் திமுக அமைச்சர் அவையிலும், கட்சிக்குள்ளும், அதிரடி மாற்றங்கள் செய்ய இருப்பதாக தகவல் வருகிறது.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தப் பின்னர் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்தை அறிவித்து பெண்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இலவச பேருந்து பயணம்

அதனைத் தொடர்ந்து அரசு பள்ளியில் படித்து மேல் படிப்பிற்காக கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற புதுமைப் பெண் திட்டம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் பெண்களின் பொருளாதார மேன்மை அடைய செய்தது. தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரும் செல்வாக்கை பெற்றார்.

மேலும் காலை உணவு திட்டம் என்று தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்கள் மத்தியில் தனக்கென்று தனி செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்.

புதுமைப் பெண் திட்டம்

இவ்வளவு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வந்தாலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40/40 என்ற முழக்கத்துடன் தேர்தல் களத்தில் இறங்கிய திமுகவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

திமுகவும், முதலமைச்சரும் நினைத்ததை போன்று 40/40 என்ற வெற்றி சுலபமானதாக தெரியவில்லை. கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் களத்தில் காணமுடிந்தது.

காலை உணவு திட்டம்

நெருக்கடிக்கு காரணம் என்ன?

கடந்த அதிமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட அம்மா திருமண மண்டபம் கட்டுமான பணியில் இருந்த பாலங்கள், கட்டிடங்கள் என்று ஏராளமான பணிகள் நிலுவையில் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் முடிவடைந்தும் அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராதது பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,  மேயர்கள், தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால் சாலைப் பணி, தெருவிளக்கு, குடிநீர், தூய்மை பணி என்று அடிப்படை பிரச்சனைகள் கூட கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேயர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஒரு அதிகாரிகளும் காது கொடுத்து கேட்பது இல்லை. அதனால் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்குள் சொல்லி கொள்ளும் அளவிற்கு எதுவும் செய்யாததால் மக்களை சந்திக்க முடியாமல் திணறியதை தேர்தல் களத்தில் காணமுடிந்தது.

MUST READ