spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம்... ஆளுநர் நடவடிக்கைக்கு  உயர்நீதிமன்றம் அதிருப்தி

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரம்… ஆளுநர் நடவடிக்கைக்கு  உயர்நீதிமன்றம் அதிருப்தி

-

- Advertisement -

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதல்வர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழக ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட 10 ஆயுள் தண்டனை கைதிகள் சார்பில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

we-r-hiring

அந்த மனுவில், நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முதல்வர் அனுமதி வழங்கி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பபப்பட்டதாகவும், ஆனால் ஆளுநர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்குகள்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயுள் தண்டனை கைதிகளை நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், முதல்வர் ஒப்புதல் அளித்தபின்பு தகுந்த காரணங்களை கூறாமல் தமிழக ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என அதிருப்தி தெரிவித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!
File Photo

மீண்டும் இந்த கோப்புகளை தமிழக அரசு 8 வாரத்திற்குள் மறுபரீசிலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

MUST READ