தஞ்சை – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு – சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டதுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூடுதலாக கட்டண விவரங்களையும் அறிவித்ததுள்ளது.

சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, சேத்தியாதோப்பு, சோழபுரம் வழியாக கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் செல்லும் சாலை மிகமோசமான நிலையில் இருந்தது. 2017-ம் ஆண்டு இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, 2018-ம் ஆண்டு 3157 கோடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணிகளை தொடங்கியது. இதன்படி, இந்த சாலை விரிவாக்கப் பணிகள் விக்கிரவாண்டி – சேத்தியாதோப்பு – சோழபுரம் – தஞ்சாவூர் என 3 கட்டங்களாக நடைபெற்று வந்தது.
இதில், 2-வது பிரிவான சேத்தியாதோப்பு முதல் சோழவரம் வரை ரூ.1,461 கோடியில் 50.275 கி.மீ. நீளத்தில் சாலை அமைக்கப்பட்டது. இதில் பின்னலூர், சேத்தியாதோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள் என 16 கி.மீ. நீளத்துக்கு புறவழிச் சாலைகளும், ரூ.100 கோடியில் அணைக்கரை பாலம் உள்பட 34 ஆற்றுப்பாலங்களும், ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி, சோழதரம் உள்ளிட்ட பகுதிகளில் 23 மேம்பாலங்களும் அமைக்கப்பட்டது.
குறிப்பாக மானம்பாடி என்ற இடத்தில் சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டது. இந்த சுங்கச்சாவடி வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 105, ஒரே நாளில் சென்று திரும்ப 160 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 170 ஒரே நாளில் சென்று திரும்ப 255 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பஸ் டிரக் போன்ற வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 360 ஒரே நாளில் சென்று திரும்ப 540 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதந்திரர பாஸ்க்கு 3530 முதல் 18740 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், சுங்க கட்டணத்தை உயர்த்த கூடாது என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய சுங்கச்சாவடி திறக்கும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது குறிப்பிட்தக்கது.
ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்… திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி குற்றச்சாட்டு…