spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பா.ம.க - ஜி.கே.மணி கருத்து

ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பா.ம.க – ஜி.கே.மணி கருத்து

-

- Advertisement -

பட்டாளி மக்கள் கட்சியின் தலைமை பதவி தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பா.ம.க என அக்கட்சியின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பா.ம.க - ஜி.கே.மணி கருத்து

பா.ம.க ராமதாஸ் பிரிவு எம்.எல்.ஏ ஜி.கே.மணி டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்தாா். அப்போது அவர் பேசுகையில், டெல்லி காவல்துறையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சார்பில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஜி.கே.மணி தெரிவித்தார். அதில், பா.ம.க தலைவர் என்ற பதவிக்காலம் முடிந்த பிறகும் போலியான ஆவணங்களை தயாரித்து, தன்னை 2026 வரை தலைவராக காட்டி தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சமர்ப்பித்ததாக கூறப்பட்டுள்ளது.

we-r-hiring

மேலும் அவர் கூறியதாவது, அன்புமணி 2026 வரை தலைவராக இருப்பதாக கூறிய ஆவணம் தவறானது என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் ராமதாஸ் தரப்பு தேர்தல் ஆணையத்துக்கு கொடுத்துள்ளோம். ஆனால் அதை ஏற்காமல் தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஆதரவாக உத்தரவு பிறப்பித்திருப்பது என விமர்சித்துள்ளாா்.

“இந்திய வரலாற்றில் எந்தக் கட்சிக்கும் இதுபோன்ற நிலை உருவாகியதில்லை. தேர்தல் ஆணையமே இவ்வாறு நடந்தால் அரசியல் கட்சிகள் அதைப் பற்றி நம்பிக்கை வைப்பது எப்படி?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளாா்.

பா.ம.க தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்புக்காக பிறப்பித்த உத்தரவு டெல்லி உயர்நீதிமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாகவும் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.

மேலும் அவர் கூறுகையில், 2022 முதல் 2025 வரை மட்டுமே அன்புமணி தலைவராக இருந்தது அனைவருக்கும் தெரியும். தவறான காலக்கெடு கொண்ட ஆவணத்தை சமர்ப்பித்ததை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. தேவைப்பட்டால் சிவில் நீதிமன்றத்தை அணுகுவோம் என்றும் தற்போது வரை பா.ம.க தலைவர் நிறுவனர் ராமதாஸே என குறிப்பிட்ட அவர்,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளாா்.

சமரசத்திற்கு மருத்துவர் ராமதாஸ் பல நாட்கள் காத்திருந்தார் ஆனால் அன்புமணி இதுவரை வரவில்லை. சமரசம் வேண்டுமென்றால் அன்புமணிதான் ராமதாஸை அணுக வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளாா்.

கபடி பயிற்சியாளரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்…

MUST READ