spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகபடி பயிற்சியாளரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்…

கபடி பயிற்சியாளரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்…

-

- Advertisement -

தென் மாவட்டங்களில் கபடி வீரர்களுக்காக தங்குமிடங்களுடன் கூடிய பயிற்சி மையங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என கபடி பயிற்சியாளர் மணத்தி கணேசனின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளாா்.கபடி பயிற்சியாளரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்…சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கான நலிவு நிலை குறைப்பு நிதி காசோலை , சமூக நல்லிணக்க விருது பெற்ற ஊராட்சிகளின் தலைவர்களுக்கு தலா ரூ.1 கோடிக்கான காசோலைகளை வழங்கினார்.

ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கான திட்டங்கள் குறித்தும், மகளிர் சுய உதவி குழுவினர் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்ட முதலமைச்சர் பழங்கால கொம்பு உள்ளிட்ட இசைக்கருவிகள் வைக்கப்பட்டிருந்த பழங்கால இசைக்கருவிகளின் அரங்குகளை பார்வையிட்டார்.  அர்ஜுனா விருது பெற்ற கபடி பயிற்சியாளரும் அண்மையில் வெளிவந்த பைசன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவருமான மணத்தி கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மேடையில் உரையாற்றிய நிலையில், தென் மாவட்டங்களில் சிவகங்கை மற்றும் தேனியில் மட்டுமே விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் கபடி பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் தென் மாவட்டங்களில் கபடி  வீரர்கள் அதிகம் இருக்கும் நிலையில் தங்குமிடங்களுடன் கூடிய கூடுதல் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

we-r-hiring

முதலமைச்சர் மேடை உரை

சிறப்பு விருந்தினராக வருகை தந்து உரையாற்றிய மணத்தி கணேசனை அழைக்க காரணம் கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்து தனது  தன்னம்பிக்கையால் வெற்றி பெற்றவர். எனவே அவரை சிறப்பு விருந்தினராக அழைத்தோம்.  அவர் மேடையில் வைத்த கோரிக்கைகள் உறுதியாக நிறைவேற்றப்படும். எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து, சமத்துவ சமுதாயமாக வாழ வேண்டும்.  லட்சியங்களை திட்டங்கள் மூலம் வென்றெடுக்கும் வழிதான் ஆட்சி. விளிம்புநிலை மக்களை  முன்னேற்றி வருகிறோம். இன்றைய நாள் சிறப்பு மிக்க நாளாக அமைந்துள்ளது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். விதிப்படி, விகிதாசார அடிப்படையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு நிதியை ஒதுக்கி வருகிறோம். ஒரு சமூகம் முன்னேற கல்வியே அடிப்படை. ஆதிதிராவிட, பழங்குடியின பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு. ஐஐடி என்ஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் 135 மாணவர்கள் பயின்று வருகின்றனர். முன்னர் இந்த எண்ணிக்கை 16 ஆக இருந்தது.

உடற்பயிற்சி கூடம் உள்ளிட்டவற்றுடன் 80 கோடியில் 6 இடங்களில் மாதிரி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. முத்தாய்ப்பான திட்டமாக நான் நினைப்பது அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டம் .  2003-21-ல் 6 பேர் மட்டுமே பயனடைந்தனர். 5 ஆண்டில் 385 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். 162 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பையும் படிக்க வேண்டும். கடந்த 4 ஆண்டில் 9659  மாணவர்களுக்கு 90.27 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சட்டப்படிப்பு இறுதியாண்டு பயில்வோருக்கு பயிற்சி உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. முக்கியமான திட்டங்களை தலைப்புச்செய்திகளாக கூற வேண்டும் என்றால் திறன் பயிற்சிக்காக தொல்குடி திட்டம். முதலமைச்சரின் ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் மேம்பாட்டு திட்டம். நன்னிலம் மகளிர் உரிமைத் திட்டம் 3.3 லட்சம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளோம். அயோத்திதாசர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம்  மூலம் 4 ஆண்டில் 910 கோடி  செலவிடப்பட்டுள்ளது.  சாதி பாகுபாடற்ற ஊராட்சிகளுக்கு விருது வழங்கி வருகிறோம். எள் முனை அளவுதான் இவ்வளவு நேரம் கூறியுள்ளோம். சமூக தடைகளை உடைத்து ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேறி வர வேண்டும். பெரியார் அண்ணா கனவு கண்ட ஆதிக்கமற்ற சமூகத்தை அமைத்தே தீருவோம் என முதலமைச்சர் கூறினார்.

பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்…மத்திய அரசு உச்ச வரம்பு நிர்ணயம்…

 

MUST READ