spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து ஆசிரியர் பலி

ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து ஆசிரியர் பலி

-

- Advertisement -

ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து ஆசிரியர் பலி

மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற அரசு பள்ளி ஆசிரியர் தவறி விழுந்து ரயிலில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் சென்னை சைதாப்பேட்டை சேர்ந்த அண்ணாமலை (52)என்பவர் திண்டிவனம் அருகே உள்ள கொடியாம்புதூர் அரசு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் காலை சென்னை எழும்பூரில் இருந்து பாண்டிச்சேரி வரை செல்லும் பயணிகள் ரயிலில் செல்வது வழக்கம். ரயில் செல்லும் போது வீட்டில் எடுத்துச் செல்லும் உணவை சாப்பிட்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவுவதற்காக ரயிலில் இருந்து இறங்கி அங்கு உள்ள குழாயில் பாத்திரம் மட்டும் கை கழுவிட்டு மீண்டும் ரயிலில் ஏறுவதற்காக வந்துள்ளார்.

we-r-hiring

அப்பொழுது ரயில் புறப்பட்டு உள்ளது. அவசரமாக ஓடி வந்து ஏறும் போது கால் தவறி பிளாட்பாரத்திலிருந்து கீழே விழுந்த அவர், அவர் பயணித்த பாண்டிச்சேரி பயணிகள் ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை மீட்ட செங்கல்பட்டு ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

MUST READ