spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅடித்தட்டு மக்களுடைய  கலைகளில் இருப்பதே தமிழர்களின் உண்மையான வரலாறு – துணை முதல்வர்

அடித்தட்டு மக்களுடைய  கலைகளில் இருப்பதே தமிழர்களின் உண்மையான வரலாறு – துணை முதல்வர்

-

- Advertisement -

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதி கலைக்கோல் பயிற்சிப் பட்டறையை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அடித்தட்டு மக்களுடைய  கலைகளில் இருப்பதே தமிழர்களின் உண்மையான வரலாறு – துணை முதல்வர்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டு கழகமான, தாட்கோ மூலமாக ஆதி கலைக்கோல் -2025 என்ற தலைப்பில், இளைஞர்களுக்கான மூன்று நாள் பயிற்சி பட்டறை, சென்னை வர்த்தக மையத்தில் 22 ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.

பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசிய துணை முதலமைச்சர் உதயநதி ஸ்டாலின், இந்த பட்டறையை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. கலைஞர்கள், எழுத்தாளர்கள்,ஓவியர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதோடு பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.

we-r-hiring

தந்தை பெரியார், கலை ஒரு பொழுதுபோக்ககு அம்சமாக இருந்து விடக் கூடாது என தெரிவித்திருந்தார். கலைகள் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என பெரியார் விரும்பினார். குறிப்பாக மூட நம்பிக்கைகளை பரப்பும் கலைகளை பயன்படுத்தக் கூடாது என்பதில் பெரியார் தெளிவாக இருந்தார். அதேபோன்று திராவிட இயக்கம் தற்போதும் அதனை தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

பெரியார் மற்றும் முத்தமிழ் அறிஞர் அவர்களின் நாடகம்,திரைப்படங்கள் மூலமாக சமூக முன்னேற்றத்திற்கான கருத்துக்களை கிடைக்கும் ஒவ்வொரு முறையும் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.ஆதிதிராவிட மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரலாக இருந்துள்ளது.

அடித்தட்டு மக்களின் நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் சமூக கொடுமைகள் இயற்கை சீற்றங்கள், மக்களைக் காப்பாற்றிய ஹீரோக்களாக சொல்லிக் கொண்டிருக்கும் இவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்ற ஹீரோக்களை நாட்டுப்புற கலைஞர்கள் மூலமாக 100 ஆண்டுகளாக தமிழ் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் கலைகள் பாடல்கள் ,நடனம்,இலக்கியம் ஓவியம், அதில் ஒரு வகையான ஏக்கம்,கோபம் எதிர்பார்ப்பு என அனைத்தும் இருக்கும்.

அடித்தட்டு மக்களுடைய  கலைகளில் இருப்பதே தமிழர்களின் உண்மையான வரலாறு .எளிய மக்களின் கலைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். இந்த மூன்று நாள் பயிற்சி பட்டறை இந்த காலத்து இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

ஆதி திராவிடர் பழங்குடியினரின் கலைகளுக்கு அவர்களின் பண்பாட்டை முன்னெடுக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கலைத்திறன் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எல்லா கலைகளுக்கும் சமமான முக்கியத்துவம் கிடைக்கிறதா என்றால் இல்லை. உயர் தட்டு மக்களுக்கு பயன்படுத்தும் கலைக்கும், எளிய மக்களின் கலைக்கும் பாகுபாடு இருக்கிறது.  அப்படி கலையில் இசையில் பாகுபாடு இருக்ககூடாது என்பதற்கு தான் இந்த முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது  என்று துணை முதலமைச்சர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில், ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறையில், தொன்மையான தமிழர் இசைக் கருவிகள், பாரம்பரிய ஆடை,பள்,  தோடர் கலைகள், குறும்பர் ஒவியங்கள், தொல்பாவை கூத்து போன்றவற்றை அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளது. எளிய மக்களின் கலைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று தான் இந்த பயிற்சி பட்டறையை அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் கலைகளை அனைவருக்குமான கலைகளாக மாற்றுவது தான் இந்த பயிற்சி பட்டறையின் நோக்கம் என்று துணை முதலமைச்சர் கூறியுள்ளாா்.

இதில், எழுத்தாளர் இமையம், ஓவியர் சந்துரு குருசாமி, ஆகிய கலைஞர்கள் மற்றம் பயிற்சியாளர்கள் நாட்டுப்புற கலைகள்,நாடக கலை, இலக்கிய கலை,காட்சி கலை என பல தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

இப்பயிற்சி பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள்,இந்த பயிற்சி பட்டறை தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிந்த கலைகளை இன்னும் சிறப்பாக கற்றுக் கொள்வதற்கு இது வாய்ப்பாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும் பத்மஶ்ரீ வேலு ஆசான்,டிராட்ஸ்கி மருது,எழுத்தாளர்கள்,சுகிர்தராணி, இமையம்,நாடக கலைஞர் ராமசாமி,ஒவியர் சந்திர சேகரன் குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்று உரை நிகழத்தினர்.

இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அமைச்சர் மதிவேந்தன்,குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக தலைவர் இளையராஜா,துறை செயலாளர் லட்சுமி பிரியா,மேலாண்மை இயக்குனர் கந்தசாமி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் அரங்குகள் மற்றும் அரசு சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களின் கலை படைப்புகளை பார்வையிட்டார். மேலும் பாரம்பரிய இசை கலைகளை கலைஞர்கள் துணை முதலமைச்சருக்கு வாசித்து காட்டினர்.

மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!!

MUST READ