Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்

தமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! – காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்

-

தமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! இதுதான் காங்கிரஸ் நிலைமை என அஜய் குமார் – காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பேசியுள்ளார்.

தமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்

 

தமிழகத்தில் 67,000 பூத் இருக்கிறது. அதில் 30,000 ஆயிரம் பூத்தில் ஆளே இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அஜய் குமார் கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் முன்னாள், இன் நாள் தலைவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் அஜய் குமார் கலந்துக்கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு டிசம்பரில் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்கு வீடு வீடாக சென்று வாக்குகள் கேட்க வேண்டும். அதை செய்தே ஆக வேண்டும். இருப்பதிலேயே சுலபமான வேலை பேசுவது தான். அதுவும் அரசியல் பேசுவது என்பது மிகவும் எளிய வேலை.

தமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்

சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாத யாத்திரை போக சொல்லிவிட்டேன். அப்பொழுதுதான் களத்தில் உண்மையான காங்கிரஸ்காரர்களை அவர்களால் பார்க்க முடியும்.

மாவட்ட தலைவர்கள் அவர்களது மாவட்டத்தில் யாத்திரை மேற்கொள்ள வேண்டும். நமது தலைவர் 4000 கிலோமீட்டர் நடக்கும் போது உங்களால் 100 கிலோ மீட்டர்கள் யாத்திரை போக முடியாதா? நாளையிலிருந்து இதை செய்யுங்கள்.

தயவு செய்து என்னிடம் வந்து சொல்லாதீர்கள் எனக்கு மரியாதை இல்லை எனக்கு தேர்தலில் சீட்டு இல்லை என்று? இதையெல்லாம் செய்யவில்லை என்றால் எப்படி மரியாதை கிடைக்கும்? எப்படி சீட்டு கிடைக்கும் ?

பத்து நாளுக்கு ஒரு நாளைக்கு 10 கிலோ மீட்டர் என்று நடந்தால் போதும், இதை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சொல்கிறேன் இதை செய்யுங்கள். முதலில் மாவட்ட தலைவர்கள் செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை செய்ய வேண்டும். இதில் இறுதியாக தமிழகம் முழுவதும் மாநிலத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் யாத்திரை மேற்கொள்வார்கள். அப்படி நாம் செய்தால்தான் கூட்டணி கட்சி தலைவர்களிடம் தொகுதி பங்கீடு பேசும்பொழுது அவர்கள் கண்ணை பார்த்து அதிக இடத்தை பெற முடியும்.

தமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்

நம்முடைய கட்சியை பொறுத்தவரை சித்தாந்தத்தில் பிரச்சனை இல்லை! இதில் அகில இந்திய அளவில் சிறந்த தலைவர் சிறந்த கொள்கை என உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

எந்த கட்சியும் கடினமான உழைப்பில்லாமல் வெற்றி பெற முடியாது. காங்கிரஸ் கட்சியினர் நமது காமராஜரை நினைவில் கொண்டு அவர் எப்படி செயல்பட்டார் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

மாவட்ட தலைவர்களுக்கு என ஒரு திட்டமிட்டு உங்களது மாவட்டத்தில் நீங்கள் நடபயணம்  மேற்கொள்ளுங்கள். 77 மாவட்டத் தலைவர்களும் நடைபயணம் செய்ய வேண்டும் அதற்கு அடுத்த மாதம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்ல வேண்டும், இறுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் நடை பயணம் செய்வார்.

MUST READ