Homeசெய்திகள்தமிழ்நாடுபணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு

-

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பேருந்து பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த காலாவதியான பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசு பேருந்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 15 பேருந்துகள் காலாவதியான பேருந்துகளாக ஓரம் காட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த பேருந்துகள் ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுத்த நபர் அதனை கடந்த சில நாட்களாக கேஸ் வெல்டிங் மூலமாக அகற்றுகிறார். இந்த நிலையில் நேற்று பகல் நேரங்களில் இந்த பணிகள் நடைபெற்ற நிலையில் இன்று அதிகாலை இந்த பேருந்துகளில் ஒரு பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது.

இந்த தீயானது அடுத்தடுத்த பேருந்துகளுக்கும் பரவ துவங்கிய நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்து அவர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் ஒரு பேருந்து முழுமையாகவும் 3 பேருந்துகள் பகுதியாகவும் எரிந்து சேதம் அடைந்தன. அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் இது குறித்த முதல் கட்ட ஆய்வு செய்தபோது பகல் நேரங்களில் செய்யப்பட்ட வெல்டிங் பணியானது சீட்டில் உள்ள பஞ்சுகளில் பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து அதிகாலையில் பெரிய தீ விபத்தாக மாறியது தெரிய வந்தது. இருந்தாலும் இது குறித்து பண்ருட்டி காவல் துறையினர் வழக்கு பதிந்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ