மணப்பாறை அருகே காகித தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள 10 வீடுகளின் பூட்டை உடைத்து 45 சவரன் நகை, 1.50 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு காகித தொழிற்சாலையின் இரண்டாம் அலகு செயல்பட்டு வருகின்றது. இதில் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் நிரந்தர பணியாளர்களுக்கு என ஆலையின் அருகில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில் அந்த குடியிருப்பில் வசிக்கும் சில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு சென்று விட்ட நிலையில் 9 குடியிருப்புகளிலும், ஒரு குடோனிலும் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் வசிக்கும் குடியிருப்பில் உள்ளவர்கள் இதுபற்றி ஆலை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் (apcnewstamil.com)
தகவலின் பேரில் ஆலை நிர்வாகத்தினர் பார்வையிட்ட பின் இதுபற்றி மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்ட் மற்றும் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
ஐஸ்கிரீமில் மனித விரல்… ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்… (apcnewstamil.com)
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டதுடன், விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் 45 சவரன் நகையும், ரூ.1.50 லட்சம் ரொக்கப்பணமும் கொள்ளை போயிருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.