Homeசெய்திகள்க்ரைம்சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

-

- Advertisement -

சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்சென்னை அடுத்த கொளப்பாக்கம் ஒமேகா தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்  வந்துள்ளது. இதன் காரணமாக பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உடன் சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் மாணவர்களின் புத்தகப்பை, உணவுப் பைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பெற்றோர்கள் அலறி அடித்து பள்ளி முன்பு தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல தற்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டலால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இதன் அருகே உள்ள கெருகம்பாக்கம் தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. மின்னஞ்சல் அனுப்பிய அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ