spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவள்ளுவர் சிலை திறப்பு வெள்ளி விழா விழிப்புணர்வு விரைவு பேருந்துகள் -  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

திருவள்ளுவர் சிலை திறப்பு வெள்ளி விழா விழிப்புணர்வு விரைவு பேருந்துகள் –  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவங்கி வைத்தார்

-

- Advertisement -

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி திருவள்ளுவர் புகைப்படத்துடன் அலங்கரிக்கப்பட்ட பேருந்து இயக்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து  துவக்கி வைத்தார்.

திருவள்ளுவர் சிலை திறப்பு - முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவரின், 133 அடி உயர சிலை திறக்கப்பட்டு, 25 ஆண்டுகள் நிறைவையொட்டி வெள்ளி விழா தமிழ்நாடு அரசு சார்பில் வரும் டிசம்பர் 30 மற்றும் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

we-r-hiring

திருவள்ளுவர் சிலை திறக்கபட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை சார்பில் சென்னை பல்லவன் இல்லம் பணிமனையில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா இலச்சினை மற்றும் சிலை குறித்த விவரங்கள் அடங்கிய தமிழ்நாடு அரசுப் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் –  வள்ளுவம் போற்றுதும் 25 ஆண்டு வெள்ளி விழா என்று அலங்கரிக்கப்பட்ட 10 பேருந்துகளின் சேவையை கொடியசைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இருந்து 2 பேருந்துகள் கன்னியாகுமரிக்கும், இதர வழித்தடங்களான கோவை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம், பெங்களூர், தூத்துக்குடி, திண்டுக்கல், சேலம், கும்பகோணம் ஆகியவற்றுக்கு தலா 1 பேருந்தும் என 10 பேருந்துகள் வள்ளுவம் போற்றுதும் 25 ஆண்டு வெள்ளி விழா முன்னிட்டு இயக்கப்பட உள்ளன.

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பே.சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பிரியா ராஜன், மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

திருவள்ளுவர் சிலை திறப்பு - முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பே.சாமிநாதன் கூறியதாவது…

அய்யன் திருவள்ளுவர் சிலையின் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது பேருந்துகள் இயக்கம் துவக்கப்பட்டு உள்ளது. மேலும் மக்களிடையே நிகழ்ச்சி குறித்து பரப்புரை மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

MUST READ