spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசர் பிட்டி தியாகராயருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சர் பிட்டி தியாகராயருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

-

- Advertisement -

 

சர் பிட்டி தியாகராயருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

we-r-hiring

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜூன் மாதத்தில் மோதும் 2 கமல்ஹாசன் படங்கள்…. இதுதான் ரிலீஸ் தேதியா?

சர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாளையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தப்பட்டது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘ஹாட் ஸ்பாட்’….. ஓடிடி ரிலீஸ் எப்போது?

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி! தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர் – நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ