
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்துள்ளது.

சேலம் மாநகராட்சி கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 27) காலை முதல் வருமான வரித்துறையின் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வங்கியில் உள்ள ஆவணங்களைச் சரிபார்த்த அதிகாரிகள், வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, 20 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது. வங்கியில் இருந்து பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
“தக்காளி விலை கிலோவுக்கு ரூபாய் 10 குறைந்தது”- அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!
முன்னதாக, வருமான வரித்துறை சோதனை குறித்து விளக்கம் அளித்த வங்கித் தலைமை அலுவலகம், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறியது.