
தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கனகசபையில் பக்தர்களை அனுமதிக்கத் தீட்சிதர்கள் மறுத்ததால் பரபரப்பு!
இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையை இன்று (ஜூன் 28) காலை 10.00 மணிக்கு ஆய்வு செய்த அமைச்சர் பெரியகருப்பன், “வழக்கமான கொள்முதலை விட 15% அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு மக்களைப் பாதிக்கும் என்பதால், விலையைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் கூறினார். பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 60- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தெய்வத்தமிழ்ப் பேரவையினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பாஜகவினர்- சீமான் கண்டனம்
தமிழகத்தில் உள்ள 62 மையங்களில் கிலோ ரூபாய் 60- க்கு தக்காளி விற்பனை நடந்து வருகிறது. அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி கிலோவுக்கு ரூபாய் 10 குறைந்துள்ளது. மூன்று முதல் நான்கு நாட்களில் தக்காளி விலை முழுமையாகக் குறையும். தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.


