ஏப்.21-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரம் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக எதிர்க்கட்சித்தலைவர் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் கூச்சல் எழுப்பில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதே சமயம் பன்னீர்செல்வம் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தார்.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரம் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது. மார்ச் 23 ஆம் தேதி பட்ஜெட் மீதான பொதுவிவாதம் தொடங்குகிறது. பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 21ஆம் தேதி முதல் மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.மார்ச் 28 ஆம் தேதி முதல் பல்வேறு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறவுள்ளது.