
தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவடி மாநகராட்சி ஆணையராக கந்தசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி ஆணையாளர் ஷேக் அப்துல் ரகுமானை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி ஆணையராக ரஞ்சித் சிங்கை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாநகராட்சி ஆணையராக அனு நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சி ஆணையராக சுகாபுத்ராவை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக அமிர்தஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம், நகராட்சி நிர்வாக இணை செயலாளராக பணியிடமாற்றம் செய்ய்பபட்டுள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓசூர் மாநகராட்சி ஆணையாளராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
புது திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக ஹனீஷ் சாப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற நிதியம், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக விவேகானந்தன் நியமனம்.
ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக ஆர்.சதீஷ் நியமனம்
POWERFIN நிறுவன நிர்வாக இயக்குநர் அம்பலவானன், தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக மாற்றம்
நிதித்துறை இணைச் செயலாளர் கிருஷ்ணனுன்னி, கருவூலத்துறை ஆணையராக நியமனம்
திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுஹபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராக மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


