Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய உச்சத்தைத் தொட்டது தக்காளியின் விலை!

புதிய உச்சத்தைத் தொட்டது தக்காளியின் விலை!

-

 

தமிழகத்தில் தக்காளி விலை உயர்வு... பொதுமக்கள் கவலை!
File Photo

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?

கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும், விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்துக் குறைவுக் காரணமாகவும், கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக கோயம்பேடு சந்தையில் சில்லறை விலையில், 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்த தக்காளி, தற்போது 200 ரூபாயை நெருங்கி வருகிறது. மொத்த விலையில், 160 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாகிறது.

தக்காளியின் உற்பத்திக் குறைவு, கொள்முதல் விலை உயர்வு ஆகிய காரணங்களால், தக்காளியின் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!

தக்காளியின் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ