Homeசெய்திகள்தமிழ்நாடுபல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்

பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்

-

பல்லை பிடுங்கிய விவகாரம்- ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட்

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் தொடர்பாக அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நெல்லை அருகே பல்லை உடைத்து ஏஎஸ்பி சித்ரவதை செய்த புகார் பற்றி பேரவையில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது காவல் அதிகாரியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களில் எந்த விதமான சமரசங்களையும் திமுக அரசு செய்யாது, பல்லை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் ஏ.எஸ்.பியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசியல் சார்பில் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது காவல்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்களைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், புதிதாக திருமணமான ஒருவர் புகாருக்கு ஆளான நிலையில், அவரது விதைப் பையை நசுக்கி சித்ரவதை செய்ததாகவும், இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

MUST READ