spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி

சுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் பலி

-

- Advertisement -

ஏற்காடு சுற்றுலா சென்ற வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கேரள மாநிலம் கோட்டயத்தை  சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்தில் பலி.

சுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலி18 நபர்கள்  படுகாயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி அரசு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

we-r-hiring

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேனி மாவட்ட எல்லை பகுதியான காட்ரோடு பகுதியில் தேனி நோக்கி சென்ற கேரள மாநில காரும், தேனியில் இருந்து  ஏற்காடு நோக்கி சென்ற சுற்றுலா வேனும்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்  கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில்  வேன்  சாலையில் கவிழ்ந்தது. விபத்துக்குள்ளானது காரில் பயணித்த நான்கு நபர்களில் மூன்று நபர்கள் அப்பளம் போல் நொருங்கிய காரின் இடிப்பாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலே பலியானார்கள்.

சுற்றுலா சென்ற வேனும், காரும் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் பலிமேலும் ஒருவர் பலத்த காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் ஏற்காடு நோக்கி சுற்றுலா செல்ல சுற்றுலா வேனில் பயணித்த 18 நபர்கள் பலத்த  காயங்களுடன் வத்தலகுண்டு, பெரியகுளம் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அப்பளம் போல் நொறுங்கிய  காரில் பயணித்த 4 நபர்களில் மூவர் பலியான நிலையில் ஒருவர் படு காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பெயர் விவரம் தெரிய வரவில்லை. முதல்கட்டமாக காவல்துறை விசாரணையில் கேரள மாநிலம் கோட்டையத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

MUST READ