Homeசெய்திகள்தமிழ்நாடுமணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 

மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை 

-

- Advertisement -

நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் பிற்பகலில் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் வனச் சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

கனமழை தொடர்வதால் அருவிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலாவிற்கு வரும் பொதுமக்கள் அருவியில் குளிக்க மட்டும் வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது

MUST READ