Homeசெய்திகள்தமிழ்நாடுதோட்டங்களுக்கே சென்று தக்காளி கொள்முதல் செய்யும் வியாபாரிகள்!

தோட்டங்களுக்கே சென்று தக்காளி கொள்முதல் செய்யும் வியாபாரிகள்!

-

 

File Photo
தோட்டங்களுக்கே சென்று தக்காளி கொள்முதல் செய்யும் வியாபாரிகள்!

சத்தியமங்கலம் அருகே தாளவாடியில் வரலாற்றிலேயே முதன் முறையாக, தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு தோட்டத்திலேயே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலை பகுதியில் கொங்கள்ளி, தளமலை, அருள்வாடி உள்ளிட்ட 40- க்கும் அதிகமான கிராமங்களில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றனர். ஆண்டுதோறும் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு உரம் விலை உயர்வு, போதிய விலைக் கிடைக்காத நிலை போன்றவற்றால், 50 ஏக்கரில் மட்டுமே தக்காளி பயிரிடப்பட்டுள்ளது.

அருகே உள்ள கர்நாடகா பகுதிகளிலும் குறைந்த அளவே தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேறெங்கும் தக்காளி கிடைக்காததால், வியாபாரிகள் போட்டிப் போட்டு கொண்டு தோட்டங்களுக்கே சென்று கொள்முதல் செய்கின்றனர்.

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?

இதனால் கடந்த சில நாட்களாக, கிலோ 70 ரூபாயாக இருந்த தக்காளியின் விலை படிப்படியாக உயர்ந்து 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. தாளவாடி வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவது இதுவே முதல்முறை என விவசாயிகள் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளனர்.

MUST READ