நிறுத்தி வைக்கப்பட்ட விரைவு ரயிலின் பெட்டிகளில் ஏற்பட்ட தீயில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
ஜிவி பிரகாஷின் ‘அடியே’….திரை விமர்சனம்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக 60- க்கும் மேற்பட்டோர் சுற்றுலா விரைவு ரயிலில் கடந்த ஆகஸ்ட் 17- ஆம் தேதி தமிழகம் வந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ரயிலின் ஒரு பெட்டியில் ஏற்பட்ட தீ, மளமளவென அடுத்தடுத்த பெட்டிகளிலும் பரவியது. இதையடுத்து, ரயிலில் இருந்த பெரும்பாலான பயணிகள் வெளியேறிய நிலையில், சுமார் 6 பேர் உடல் கருகிப் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் புதிய படம்…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
விரைவு ரயிலில் சமையல் செய்த போது கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட தீ விபத்தே, இந்த விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.