Homeசெய்திகள்தமிழ்நாடு"ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

-

 

"ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதி"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Photo: CM MKStalin

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையம் மற்றும் சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, மீட்புப் பணிகள், அழைப்புகள் உள்ளிட்டவற்றைக் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 03) காலை 08.00 மணிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அத்துடன், ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்”- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒடிஷா ரயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மூன்று ரயில்கள் மோதி 200- க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல் வந்துள்ளது. கோர ரயில் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களைத் தொடர்புக் கொள்ளுவதற்கும், மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தேன். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் சிவசங்கர், அதிகாரிகள் ஒடிஷா மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.

ரயில் விபத்து: தமிழக முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து!

ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோரின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோருக்கு ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கப்படும். ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகத்தைச் சேர்ந்தோருக்கு ரூபாய் 1 லட்சம் நிதி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ