Homeசெய்திகள்இந்தியா"ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்"- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்”- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

-

 

"ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்"- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
Photo: ANI

பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஹவுரா ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

முதலமைச்சர் சித்தராமையா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….கர்நாடக மக்கள் மகிழ்ச்சி!

நேற்று (ஜூன் 02) நள்ளிரவு நடந்த இந்த ரயில் விபத்தில், இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர்; 900- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரத், சரோ ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் நேற்று இரவு முதல் விடிய, விடிய விமானப்படையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகளில் உள்ளூர் பகுதி வாசிகளும், பொதுமக்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 முதல் ரூபாய் 2 லட்சம் வரை நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!

அதேபோல், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணைக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

MUST READ