ராஜஸ்தானில் நடைபெறும் புகழ்பெற்ற கால்நடை சந்தையில் கோடி கணக்கில் விலை போகும் குதிரையும், எருமையும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.
புஷ்கர் நகரில் வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் சந்தையில் ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றில் காண்போரை வியக்க வைக்கும் “அன்மோல்” என்ற ஆண் எருமை சூப்பர் ஸ்டாராகி உள்ளது.
இதை வளர்க்கும் ஹரியானவை சேர்ந்த தொழிலதிபர் அன்மோலுக்கு தினமும் பாதாம், முந்திரி, நெய், பால் ஆகியவற்றை உணவாக தருகிறார். இதன் விலை வெறும் ரூ.23 கோடி தான் என்கிறார் அவர். அன்மோல் போல் கவனம் ஈர்த்த மற்றொரு விலங்கு ஷபாஸ் என்ற குதிரை. இதன் உரிமையாளர் சண்டிகரை சேர்ந்தவர். இவா் தனது குதிரைக்கு ரூ.15 கோடி விலை நிர்ணயித்துள்ளார். குதிரை ஷபாஸ், எருமை அன்மோல் ஆகியவற்றின் வீரியமிக்க உயிரணுக்களே இவற்றின் மதிப்பை கோடிக்கணக்கில் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரத்தில் ரூ.4.5 கோடி கொள்ளை.. 5 பேர் கைது..! கேரளா விரைந்த தனிப்படை..!!



