spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் சோகம்…கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி…

ஆந்திராவில் சோகம்…கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி…

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாத விரக்தியால், 60 வயது முதியவா் தனது சொந்த செலவில் ரூ.10 கோடி மதிப்பில் கோயில் கட்டியுள்ளாா்.ரூ.10 கோடி மதிப்பில் கட்டிய கோயில்…கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி… ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிமுகுந்த பாண்டா பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலிக்கு சாமி தரிசனத்திற்கு சென்றிருந்தாா். அப்போது  கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி, சுவாமி தரிசனம் செய்ய மணிக்கணக்கில் காத்திருந்து கோயிலுக்குள் மூலவரை தரிசனம் செய்ய கருவறை அருகே சென்றபோது, தனக்கு 60 வயதிற்கு மேல் ஆகிவிட்டதால் ஒரு நிமிடம் சாமியை தரிசனம் செய்வதாக கூறியுள்ளாா்.  ஆனால் அங்கு பணியில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை ஒதுக்கித் தள்ளினர். இதனால் அவர் விரக்தியுடன் வீடு  திரும்பினாா். தனக்கு நடந்த அனுபவத்தை தனது தாயாரிடம் பகிர்ந்து கொண்ட பிறகு, பெருமாளுக்கு கோயில் கட்ட முடிவு செய்தார். ஏற்கெனவே  ஹரிமுகுந்த பாண்டாவிற்கு காசிபுக்கா – பலாசா இரண்டு  நகரத்தின் மையத்தில் அவர்களின் குடும்பத்திற்கு சுமார் நூறு ஏக்கர் நிலம் உள்ளது.ரூ.10 கோடி மதிப்பில் கட்டிய கோயில்…கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி… எனவே   தென்னந்தோட்டங்கள் மத்தியில்  உள்ள  12 ஏக்கர் 40 சென்ட் பரப்பளவில் கோயில் கட்டினார்.  இதில் ஸ்ரீதேவி , பூதேவி தாயார்களுடன் பெருமாள்  சிலைகள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அத்துடன் நவக்கிரக தெய்வங்களுடன், அனைத்து தெய்வங்களின் சிலைகளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று ஏகாதசி என்பதால், அதிகமான கூட்டம் வந்தது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் இறந்தனர். 31 பேர் காயமடைந்தனர்.

இரண்டே நிமிடத்தில் உங்களின் இதய ஆரோக்கியத்தை தெரிந்துக் கொள்ளலாம்….

we-r-hiring

 

MUST READ