spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?

பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?

-

- Advertisement -

அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட உள்ளார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பி.ஆர்.கவாய் ஓய்வு…உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமைநீதிபதி யார் தெரியுமா?

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வருகம் நவ.23ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளாா். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.

we-r-hiring

வழக்கமான நடைமுறையின்படி, ஓய்வு பெரும் தலைமை நீதிபதி தனக்கு அடுத்த மூத்த நீதிபதியை பரிந்துரைப்பது வழக்கம். அதன்படி, மத்திய சட்ட அமைச்சகம் தற்போது பணியில் உள்ள தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு கடிதம் எழுதி, அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த வகையில் சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு அதனை ஏற்று ராஷ்ட்ரபதி ஒப்புதல் வழங்கிய பிறகு, சூர்யகாந்த் இந்தியாவின் அடுத்த 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளாா்.

நீதிபதி சூர்யகாந்த் 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தவர்.  ஹிஸார் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து, 1984ஆம் ஆண்டு வக்கீலாக தனது சட்டப் பணியைத் தொடங்கினார் தொடர்ந்து ஹரியானா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், பின்னர் உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகவும் பணியாற்றி வருகிறார்.

அவர் நவம்பர் 24ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளாா். அவரது பதவிக் காலம் பிப்ரவரி 9, 2027 வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நீதிபதி சூர்யகாந்த், நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல் நீதிமன்ற வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர். பொதுமக்களுக்கு நீதி எளிதில் கிடைக்க வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கம். மேலும், நீதிமன்றங்களில் உள்ள வழக்கு சுமையை குறைக்கும் திட்டங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

விஜய்யின் கரூர் பயணத்தில் மாற்றம்..!! இதுதான் புது ப்ளான்..

MUST READ