spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியுவில் அனுமதி..!!

கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஐசியுவில் அனுமதி..!!

-

- Advertisement -
Shreyas Iyer admitted to ICU in Sydney hospital due to internal bleeding
பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 2 -0 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்தது. இருப்பினும் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார்.

Shreyas Iyer admitted to ICU in Sydney hospital due to internal bleeding

we-r-hiring

ஆட்டத்தின் போது விலா எலும்பில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும், அதனால் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், சிட்னி மருத்துவமனையில் அவர் ஒருவாரம் சிகிச்சை பெறுவார் என்றும் பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

MUST READ