பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்த பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல் எனப் பாராட்டியுள்ளார்.
ஐ.ஐ.டி கான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியல் பேசிய அவர், உலகளவில் இதுவரை நடத்தப்பட்ட மிகப் பெரிய சுத்திகரிப்பு மற்றும் சரிபார்ப்பு முயற்சி இதுவாகும் என தெரிவித்தார். மேலும், இது தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வரலாற்று சாதனை என்றும் குறிப்பிட்டார். இந்த பணி நிறைவடையும்போது மக்கள் இந்தியாவின் ஜனநாயக உரிமையைப் பற்றி பெருமைப்படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், நவம்பர் முதல் பிப்ரவரி வரை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த முயற்சியில் வெளிப்படைத்தன்மையும், செயல்திறனும் உறுதிசெய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.



