spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவரது மரணம் திரைத்துறைக்கு பேரிழப்பு"- டிடிவி தினகரன் இரங்கல்!

“தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவரது மரணம் திரைத்துறைக்கு பேரிழப்பு”- டிடிவி தினகரன் இரங்கல்!

-

- Advertisement -

 

ttv

we-r-hiring

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஸ்டூடியோவில் டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, நடிகர் மாரிமுத்துவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவராகவே வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கேரளா இடைத்தேர்தல்- சாண்டி உம்மன் வெற்றி

பின்னர் இன்று மாலை 03.30 மணிக்கு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், வருசநாடு அடுத்த பசுமலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது. இந்தநிலையில் மாரிமுத்துவின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “திரைப்பட இயக்குனரும், பிரபல நடிகருமான மாரிமுத்து மரணமடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது.

திரைப்படங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து, உணர்ச்சிகரமான வசனங்கள் மூலமாக தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய மாரிமுத்துவின் திடீர் மரணம் திரைத்துறைக்கும் அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

“ஜி20 மாநாட்டுக்கு கார்கேவுக்கு அழைப்பில்லை”- ராகுல் காந்தி எம்.பி. பேட்டி!

மாரிமுத்துவைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ