Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்களுக்கு பரிசாக வைர மோதிரம், வைர கம்மல் வழங்கி வரும் விஜய்

மாணவர்களுக்கு பரிசாக வைர மோதிரம், வைர கம்மல் வழங்கி வரும் விஜய்

-

- Advertisement -

கல்வி விருது வழங்கும் விழாவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வைர மோதிரம், வைர கம்மல் உள்ளிட்டவற்றை வழங்கி கெளரவித்தார்.

இந்த விழாவிற்கு இன்று காலையிலேயே திருவான்மியூர் ஸ்ரீ ராமச்சந்திரன் திருமண மண்டபத்திற்கு நடிகர் விஜய் முதல் ஆளாக வருகை தந்தார். அவர் மண்டபத்தில் நுழைந்ததும் ரசிகர்கள் பலரும் ஆரவாரத்துடன் தளபதி விஜயை வரவேற்றனர். அதை தொடர்ந்து மாணவர்களிடம் பேசத் தொடங்கினார் விஜய். அப்போது பேசிய அவர், “Say No to Temporary pleasures, Say No to Drugs” என்ற உறுதிமொழியுடன் தனது உரையை தொடங்கினார்.

தொடர்ந்து இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இவ்விழாவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வைர மோதிரம் , வைர கம்மல் உள்ளிட்டவற்றை வழங்கி கெளரவித்தார்.

MUST READ