spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்...!

கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்…!

-

- Advertisement -

பழவேற்காடு முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சதீஷ்குமார், சுமார் 1 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் கடல் அலையில் அடித்து சென்றன.

கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்...!திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த பசியாவரம் சேர்ந்த சதீஷ்குமார் தமது கூட்டாளி மூர்த்தி என்பவருடன் இன்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். முகத்துவாரத்தில் படகு சென்ற போது கடல் சீற்றத்தில் அலையில் சிக்கி படகு கவிழ்ந்துள்ளது. இதில் படகில் மீன் பிடிக்க சென்ற சதீஷ்குமார், மூர்த்தி இருவரும் கடலில் விழுந்தனர்.

we-r-hiring

கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்த விபத்தில் மீனவர்கள் இருவர் உயிர் தப்பினர்...!தொடர்ந்து சக மீனவர்கள் உதவியுடன் இருவரும் தங்களது படகை மீட்டு கரை திரும்பினார். படகு கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பிய நிலையில் படகில் வைத்திருந்த சுமார் 1லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள், வாக்கி டாக்கி இயந்திரம் ஆகியவை கடல் அலையில் அடித்து செல்லப்பட்டன. மீன்பிடிக்க சென்ற படகு கடலில் கவிழ்ந்த சம்பவம் பழவேற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

MUST READ