spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதஞ்சை அருகே அரசுப்பேருந்து மோதி இருவர் பலி!

தஞ்சை அருகே அரசுப்பேருந்து மோதி இருவர் பலி!

-

- Advertisement -

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பெண் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து கூலித் தொழிலாளி பழனிவேல்(60) மற்றும் அவரது உறவினரான 50 வயது மதிக்கத்தக்க பெண் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தனர். தஞ்சை மாவட்டம் திருக்கானூரபட்டி பகுதியில் சென்றபோது, எதிரே புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப்பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

we-r-hiring

கல்லூரி விடுதியில் மாணவி மர்ம மரணம் - உரிய விசாரணை நடத்த டிடிவி வலியுறுத்தல்

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பழனிவேல் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ