உளுந்தூர்பேட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் த.வெ.க மாநாட்டிற்கு சென்ற இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக த.வெ.க திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சீனிவாசன் தலைமையில் 5 காரில விக்கிரவாண்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் நிலைதடுமாறி விபத்தில் சிக்கியது. இதில் பலத்த் காயம் அடைந்த சீனிவாசன் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.