Homeசெய்திகள்தமிழ்நாடுரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை மத்திய ரயில்வே அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் - எம்பி...

ரயில்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை மத்திய ரயில்வே அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் – எம்பி மாணிக்கம் தாகூர்

-

- Advertisement -

ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மத்திய ரயில்வே அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி  மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்!

ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மத்திய ரயில்வே அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் - எம்.பி  மாணிக்கம் தாகூர்கடந்த வாரம் கோவையில் இருந்து திருப்பதி சென்ற இன்டர்சிட்டி ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டியில் பயணித்த நான்கு மாத கர்ப்பிணிப் பெண், ரயிலில் தனியாக இருப்பதை அறிந்து ஆண் பயணி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை தள்ளி விட்ட நிலையில் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து இன்று நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் உரையாற்றிய காங்கிரஸ்  எம்.பி மாணிக்கம் தாகூர், அண்மையில் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வு ரயில் பயணத்தின் போது பெண்களின் பாதுகாப்பையை கேள்வி குறியாக்குவதாக தெரிவித்துள்ளார்.

எனவே ரயிலில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து உடனடி நடவடிக்கையை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்கொள்ள வேண்டும் எனவும், நாட்டில் ரயிலில் பயணிக்க கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் எதற்காக “பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” போன்ற திட்டங்களை மத்திய அரசு முன்னெடுக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.

MUST READ