பணி நீட்டிப்பை எதிர்த்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம்
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை எதிர்த்து அந்த பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ளது காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம். அதில் சிவக்குமார் பதிவாளராக இருந்து வந்தார்.
இவர் கடந்த 9 ஆம் தேதியுடன் பணி நிறைவு பெற்றார். ஆனால் அவருக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து துணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் கூர்மிக் சிங் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர்கள் சிவகுமாருக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கண்களில் கருப்பு துணிக்கட்டியும், கருப்பு பேட்ச் அணிந்து மூன்றாவது நாளாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தப் பதவிக்கு தகுதியான ஒருவரை முழு நேரப் பதிவாளராக பல்கலைக்கழகம் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.