Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 3 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு

-

ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்தாண்டு சட்டப்பேரவையில் , ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு உள்ளிட்ட சில பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். தொடர்ந்து, பல்வேறு காரணங்கள் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை 2ஆம் நிலை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தலாம் என நகராட்சி நிர்வாக இயக்குனர் அரசுக்கு பரிந்துரைத்தார்.

mamallapuram

இந்நிலையில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்தத்தின் அடிப்படையிலும்,பிற காரணங்கள் அடிப்படையிலும் இந்த 3 பேரூராட்சிகளின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம் வணிகம் போன்ற தொழில் பெருக்கத்தை கருத்தில் கொண்டும் ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், திருவையாறு ஆகிய 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்து உருவாக்குவதற்கான உத்தேச முடிவு செய்து, அவ்வாறே ஆணையிடப்படுகிறது. இதையடுத்து, உத்தேச நகராட்சிகளின் வார்டுகள் எல்லைகளை வரையறை செய்து, நகராட்சிகளுக்கான அடுத்த சாதாரண தேர்தல் நடத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த 12-ம்தேதி 3 பேரூராட்சிகளையும் நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

MUST READ