Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக மாநாடு: வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி அனுமதி..!!

தவெக மாநாடு: வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி அனுமதி..!!

-

தவெக மாநாடு: வாகனங்கள் சுங்கச் சாவடிகளில்  கட்டணமின்றி அனுமதி..!!

தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்கள்  ஆத்தூர் , விக்கிரவாண்டி மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளில் கட்டணம் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுகிறது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஒரு சில இடங்களிலும், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டும், சுங்கச்சாவடிகளில் மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களிடம் சுங்கக்கட்டனம் வசூலிக்கப்படவில்லை.

TVK Maanadu

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக மாநாட்டிற்கு அதிகப்படியான வாகனங்கள் படையெடுத்து செல்வதால் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் வாகனங்கள் கடந்து செல்கின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவல்துறையினர் இலவசமாக அனுப்பி வைக்கின்றனர்.

இதேபோல் உளுந்தூர்பேட்டை மற்றும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளிலும் தவெக மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்த டோல்கேட்டுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், மாநாட்டுக்கு செல்வோருக்கென தனி பாதை அமைக்கப்பட்டு, வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

 

MUST READ