spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்?- வேல்முருகன்

முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்?- வேல்முருகன்

-

- Advertisement -

முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்?- வேல்முருகன்

தலைமைச்செயலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவால் இந்த தேர்தலோடு ஒழிய போகிறது அதிமுக.. ஸ்டாலின் முதல்வராவது உறுதி..  வேல்முருகன் அதிரடி சரவெடி..! | mk Stalin confirmed chief minister... velmurugan

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்இக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சேலம் மாநகர் , அஸ்தம்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய வேல்முருகன், “வட மாநிலத்தவர்களின் ஆதிக்கத்தால், தமிழகத்தில் தமிழர்களின் உரிமை, வணிகம், வேலைவாய்ப்பு பறிபோகிறது. தமிழகத்தில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதிசெய்ய தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களில் இறங்கியது. அதனால் தான் தமிழக முதல்வர் அவர்கள், தமிழகத்தில் உள்ள அரசு வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்ற முடிவை எடுத்துள்ளார்.

we-r-hiring

என்எல்சி நிர்வாகத்துக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்.! முதல்வர்  ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த வேல்முருகன்

அமலாக்கத்துறையினர், தலைமை செயலகத்திற்குள் நுழைவதற்கு முன் தலைமைச் செயலாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் எந்த அனுமதியும் பெறாமல், அமலாக்கத்துறையினர், பிரதமர் மோடியின் பேச்சை கேட்டுக் கொண்டு, அத்துமீறி அமைச்சர் செந்தில்பாலாஜியை அடாவடியாக கைது செய்துள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநில அரசுகளை அமலாக்கத்துறை மூலம் மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் மோடி கும்பல் இறங்கியுள்ளது. மாநில அரசுகளை கொச்சைப்படுத்தும் வகையில் அமலாக்கத்துறையினரை ஏவி விடுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செந்தில் பாலாஜி தவறு இழைத்திருந்தால் அவரை நீதிமன்றம் தண்டிக்கும். அதற்குள் ஏன் அமலாக்கத்துறையினர் அடாவடியாக செயல்பட்டனர்.

தலைமைச்செயலகத்தில் நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் அமைதிகாப்பது ஏன்? அதிகாரம் என்னிடம் இருந்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்திருப்பேன்” என்றார்.

MUST READ