spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர்...

வேல்பாரி நாவல் – சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

-

- Advertisement -

தமிழர்கள் சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பதில் மன்னர்கள்; கலையை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடக் கூடியவர்கள் தமிழர்கள் என்று “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலின் ஒரு லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளாா்.வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்று கடந்ததை கொண்டாடும் வகையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்த வெற்றி விழாவில் நாவல் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யுமான சு.வெங்கடேசன் வெற்றி விழா உரை நிகழ்த்தினாா்.  சிறப்பு விருந்தினர்களான நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், தமிழ்நாடு நிதித்துறைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.

we-r-hiring

இந்நிகழ்ச்சியில் பேசிய, ஊடகவியலாளர் கோபிநாத், ”திரைப்படங்களில்தான் பொதுவாக வைப் என்பதை பார்க்கலாம். பாரியின் பெயரைக் கூறும் போதும் இங்கு எழுந்த கைதட்டல் ஒரு வைப். தமிழ்நாட்டின் எழுத்தாளர்கள் தங்கள் பணிகளை அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள். கடந்த 7 வருடங்களாக ஆய்வு செய்து, மேற்கு தொடர்ச்சி மலை உடன் தொடர்ந்து தொடர்புகளில் இருந்துள்ளார் சு.வெங்கடேசன். எனக்கு இரண்டு நாட்களாக வேள்பாரி குறித்த சிந்தனைதான். ஷங்கர் சாருக்கு தற்போதும், வேள்பாரி குறித்தான சிந்தனைதான் இருக்கும்.

சு.வெங்கடேசனை பார்க்க சுற்றுலா வழிகாட்டி போல் தோன்றுகிறது. பாரியின், கபிலரின் கைகளைப் இழுத்துக் கொண்டு அனைவரையும் கதாப்பாத்திரங்கள் வழியாக அவ்விடங்களை நமக்கு சுற்றிக் காட்டுகிறார். குழந்தையிடம் கதை கூறும் அப்பாவின் உணர்வு தோன்றுகிறது.வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

சுதந்திர மனநிலையோடு இல்லாமல் அட்டகாசமான ஒரு நாவலை எழுதி உள்ளார் சு.வெ. அரசியல், நீதி, நிர்வாகம், கருணை,காமம், காதல், ஆத்திரம், எரிச்சல்,கலவி என அத்தனையையும் ஒரே புத்தகத்தில் எழுதி உள்ளார்.  வேள்பாரியை படிப்பவர்கள் சு.வெங்கடேசனாகவே மாறுகின்றனர்.

கற்பனை என நினைத்த பல கதாப்பாத்திரங்கள் உண்மையாகவே உள்ளதற்கான ஆவணங்கள் உள்ளன. கதாப்பாத்திரங்களின் பெயர்கள் என்னை வியக்க வைத்துள்ளன. ஆண்களுக்கு இணையாக ஆதினி, மயிலா போன்ற கதாப்பாத்திரங்களும் சுதந்திர மனிதர்களாகவே உள்ளனர்.வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

எதனையும் விற்பனை பொருளாக்குவது, தீமையை கனப்பொழுதில் மாற்றுகின்ற வல்லமைத் தன்மை வார்த்தைகளுக்கு உண்டு, வள்ளல் தன்மை என்பது நிர்வாகத் திறன் அல்ல, அது குழந்தையின் குரல் கேட்டதும் கசியும் தாயின் மார் போன்றது,  காதலை இவ்வளவு அழகாக கூற முடியாது எனத் கோபிநாத் தெரிவித்தார்”.

தொடர்ந்து, திரைக் கலைஞர் ரோஹினி பேசுகையில், ”நீலன்களுக்கும், மயிலாக்களுக்கும் வணக்கங்கள். தமிழ் வாசக சமூகம் பறம்பு மலையையும் அதன் குடிகளையும் நேசித்து கொண்டாடி வந்துள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகள் கூட்டு நினைவுகளின் அடைப்பு வேள்பாரி என சு.வெங்கேடசன் கூறி உள்ளார். பாரி குறித்து முன்னோர்களால் பாடப்பட்ட,சங்க இலக்கியத்தில் முன்னோர்கள் எடுத்துக் கொடுத்த வார்த்தைகளை தான் வார்த்து அளித்துள்ளதாக சு.வெங்கடேஷன் கூறி உள்ளார்.

வேள்பாரியில் வரும் தனைமயக்கிய மூலிகையில் இருந்து வெளிவர முடியாமல் வேள்பாரி வாசகர்கள் உள்ளதை காண முடிகிறது. ஓவியர் மரியன் செல்வனின் தூரிகை கூட தனைமயக்கிய மூலிகையால் மயங்கியது போல அவரது ஓவியங்கள் உள்ளன. காதல், போர் குறித்தான சித்தரிப்புகள் அனைத்தும் அப்படி இருந்தன.

வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

முதல்வன் படத்தில் வரும், ஒரு நாள் முதல்வன் காட்சி போன்று பறம்பு மலைக்காட்டிற்குள் ஒருநாள் வாழ முடியுமா என்கிற ஏக்கத்தை சு.வெங்கடேசனின் எழுத்து ஏற்படுத்தி உள்ளது. காடனைத்து, வேறுபாடற்ற, பேதமற்ற வாழ்வுதான் அனைவரும் வாழ விரும்புவதுதான் பறம்பு நாட்டை விரும்புவற்கான காரணம்.

பாரியிடம் எதனைப் பேசவும் ஆதினிக்கு இருந்த உரிமை பாரியின் தந்தையுடம் உரையாடுவது அவரது குழந்தை அங்கவையின் மதிக்கூர்மை பாலினச் சமத்துவத்தை கூறுகிறது. அதேப்போன்று நட்பு, தோழமை, காதல், தைரியம் என ஏராளமான சுவைகள் உள்ளது. பாரி என்ன விலை கொடுத்தாலும் சினம் கொண்டாலும் திசை மாறமாட்டார். அதேபோல்தான் தமிழ்நாடும் சமூகநீதி எனும் திசை மாறாமல் உள்ளது என ரோகினி தெரிவித்தார்”.

இதனையடுத்து பேசிய நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன்,” நிதித்துறை செயலாளராக சொல்லிலும் செயலிலும் சிக்கனத்தை கடைப்பிடிப்பது இலக்கணம். அதனால் கண்டிப்பாக சிக்கனமாகவே பேசுவேன். தமிழர்களுக்கு மரபை மீட்பதில் எப்போதும் பதற்றம் உண்டு. எதைக் கொடுத்தாவது மரபை மீட்பார்கள்.

வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

மதுரை மாவட்ட ஆட்சியராக  நான் இருந்த போது பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஆகிய இடங்களில் தேர்தலை நடத்துவதற்கு சு.வெங்கடேசனும் அவர்களின் தோழர்களும் உடனிருந்தனர். திருப்பரங்குன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் சு.வெங்கடேசன் தோல்வியடைந்ததுதான் எங்கள் இலக்கிய நட்பு உருவாக காரணம்.

கீழடிக்கு சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தேன். கீழடியில் அமர்நாத் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். விடுமுறை எடுத்து கீழடி சென்றிருந்தேன். அஞ்சனக்கோலில் இருந்து ஆதன் என்று எழுதி இருந்த மண்பாண்ட சுவடு வரை எடுத்து பார்த்தேன். அப்போது எங்களை சுற்றி வந்த பாலகிருஷ்ணன் என்கிற ஆசிரியர் அதனை 25 வருடங்களுக்கு முன்பே அந்த இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்.

நான் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து தொல்லியல் துறைக்கு தூக்கிப் போடப்பட்ட பின்னர் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்த குறுஞ்செய்தி மூலம் ஒரு ஆசிரியரை தேடிச் சென்றோம். மாணிக்கம் என்ற ஆசிரியர் அவர். ஆசிரியர் குறித்து அவர் மனைவியிடம் கேட்ட போது அவர் எங்காவது சுடுகாட்டில் இருப்பார் எனக் கூறினார்.வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

நாங்களும் ஆசிரியரை தேடிச் சென்ற போது  தேனி அருகே ஒரு இடத்தில் அந்த ஆசிரியர் முதுமக்கள் தாழியை ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். அவர் கூறிய இடத்தில் ஆய்வு செய்த போதுதான் கிடைத்த ஒரு மண்பாண்ட கனிமத்தில் இருந்துதான் இந்திய துணைக் கண்டத்தில் இரும்பு தொழில்நுட்பம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியது தமிழர்கள் என்கிற ஆய்வு.

எனக்கு அறுவை சிகிச்சை செய்த போது கூட கீழடியை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என எனது மருத்துவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ஒரு ஆசிரியர் உலகம் சுற்றும் மருத்துவர் வரை அனைவரும் தமிழ்நாட்டின் மரபையும் அதன் அடையாகங்களையும் மீட்க வேண்டும் என்கிற ஒரே அலைவரிசையில் உள்ளனர். தமிழர்களின் பண்பாட்டை மீட்பதில் வேள்பாரியின் பங்கு முக்கியமானது எனத் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் பேசுகையில், ”ஒரு திரைப்பட இயக்குநராக வேள்பாரி நாவல் குறித்து எழுந்த உணர்ச்சிகளை பகிர்ந்துக் கொள்கிறேன். கொரோனா காலத்தில் வேள்பாரியை படிக்க தேடிய போது எனக்கு பிரதியே கிடைக்கவில்லை. பின்னர் வசந்தபாலன் மூலம் சு.வெங்கடேஷனின் தனிப்பட்ட பிரதியை பெற்றுக் கொண்டேன்

வேள்பாரி நாவல் என்பது காட்சிகளுடனே விரிவடைகிறது. அதன் தொடக்க சில் அவுட் காட்சி, அதில் விருந்துக் காட்சி. அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள், இசை ஆகியவையனைத்தும் எனக்கு ஒரு பாடலாகவே விரிவடைகிறது.

மான் இனப்பெருக்கம் செய்வதால் தேரில் பயணிக்காத பாரிழ் தோகை நாய்கள், சர்க்கரை வாகை பாகு, சோமபூண்டு பாணம், ராவிரி மரம், தீக்களி பூசும் பறம்பு வீரர்கள், கோவன் கதாப்பாத்திரம், உயிர் தியாகம் செய்யும் பொற்சுவை, தேக்கன் என ஏராளமான காட்சிகள், கதாப்பாத்திரங்கள் நாவலில் விரிவடைகின்றன. சோகப்பாடலுக்கான காட்சிகள் என நாவலில் ஏராளமான இடங்கள் உள்ளன.

வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

வேள்பாரி நாவலை பாடப்புத்தகமாக கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் வைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. எனது முதல் கனவுப்படம் எந்திரன். தற்போது எனது கனவுப் படம் வேள்பாரி. எப்போது பெரிய படம் எடுத்தாலும் அதனை சந்திரலேகா பிரம்மாண்டத்துடன் ஒப்பிடுவார்கள். ஆனால் சந்திரலேகா உடன் ஒப்பிடும் அளவிற்கும் அதற்கு மேலும் செல்லும் ஒரு படமாக வேள்பாரி வரும் என நம்புகிறேன்.

ஒளிப்பதிவு, இசை என வேள்பாரியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஏராளமான ஸ்கோப் உள்ளது. Game of thrones, அவதார் போன்று உலகம் போற்றக்கூடிய அறிவுப்பூர்வமான ஜனரஞ்சகமான பெருமைமிக்க இந்திய, தமிழ் படைப்பாக வரக்கூடிய சாத்தியக் கூறு வேள்பாரியில் உள்ளது. “Hope dreames come True” எனக் கூறினார்”.வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

இதனையடுத்து, வேள்பாரி நாவலின் ஒரு லட்சமாவது பிரதி விற்பனையின் வெற்றி சின்னத்தை திறந்து வைத்து உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், ”ஆனந்த விகடனில் எந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டால் வரமாட்டேன். என்னைதான் பத்திரிகையில் கிழி கிழி என்று கிழிப்பார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து எனக்கு நெருங்கிய நட்புறவு உள்ளது. தற்போதெல்லாம் ஆயிரம் மதிப்புள்ள ஒரு பொருளை விற்பனை செய்ய 3 ஆயிரம் ரூபாய் விளம்பர செலவு தேவைப்படுகிறது.

பாரிதான் சிகிச்சைக்குப் பின்னர் உதயச்சந்திரனை இங்கே கொண்டு வந்துள்ளார். ஷங்கர் படத்தில் பிரம்மாண்டம் மட்டுமல்லாது சமூகத்திற்கான அறிவுரையும் இருக்கும்.

வேள்பாரியின் திரைவடிவத்திற்கு அனைவரையும் போன்று நானும் காத்திருக்கிறேன். என்னைப் பற்றி பேசும் போது உதயச்சந்திரன் தப்புதாளங்கள் எனக் கூறினார். ஆமாம், நிறைய தப்புதாளங்கள்தான் நடந்துள்ளது. ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருக்கு அடுத்து ஷங்கர்.

வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

வெளி மாநிலங்களில் சூட்டிங்கில் இருக்கும் என்னை மாமல்லபுரத்தில் வைக்கும் திருமணத்திற்கு இரண்டு நிமிடங்கள் வந்தால் போதும் என கூறி அழைப்பார்கள். ஆனால், அப்படியெல்லாம் இல்லாமல் வந்தால் நன்றாக இருக்கும் என சு.வெங்கேடேசன் அழைத்தார். இருந்தாலும் நிகழ்ச்சிக்கு வாசகர்கள், இலக்கியவாதிகள் வருவார்கள் அதனால் என்னை தலைமை என்று போட்டுவிட வேண்டாம் எனக் கூறினேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கலைவாணர் அரங்கத்தில்  அமைச்சர் எ.வ.வேலுவின் கலைஞர் குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில்  பேசிய போது ஓல்டு ஸ்டூடண்டுகளை வழிநடத்துவது சிரமம், வெளியேற்றுவது கடினம் எனக் கூறியிருந்தது சர்ச்சையானது. ஆனால், மேடையிலேயே அவ்வாறு கூறிய பின்னர் சீனியர்கள் என்றால் தூண்கள், அடித்தளம் போன்றவர்கள் அவர்கள் தேவை என பேசவிருந்தேன் ஆனால் அரங்கில் எழுந்த சிரிப்பலையால் அதனை மறந்துவிட்டேன். அந்த மாதிரி இன்றைய நிகழ்ச்சியில் நடந்துவிடக் கூடாது என நினைத்துக் கொண்டே வந்தேன்.வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

ஷங்கர், உதயசந்திரன், கோபிநாத், ரோஹினி என எல்லாரையும் ஏதோ காரணத்திற்காக் அழத்துள்ளனர். ஹீரோவைத்தான் கூப்பிட வேண்டும் என்றால் மகாபாரதம் படிக்கும் சிவக்குமார், இல்லையென்றால் அறிவாளியான கமலஹாசனையோ அழைத்திருக்கலாம்.

ஆனால் 75 வயதில் கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் என்னை அழைத்துள்ளனர். ஹிஸ் ஸ்டோரி என்பது, ஹிஸ்டரிதான். சாண்டில்யனின் கடல் ராணி, வந்தார் வென்றார்கள், ரமண மகரிஷி ஆகியோர் குறித்து படித்துள்ளோம்.

வேள்பாரியின் கற்பனை மிகவும் அற்புதமாக இருந்தது. மதுபானம் குறித்தான பகுதி வரும் போது எனக்கு எச்சில் ஊறியது அப்படியே மூடிவைத்துவிட்டேன்.  1996 ஆம் ஆண்டு நரசிம்மராவை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் அரசியலில் இருந்து ஓய்வுக்கு பிறகு படிப்பதற்கு 8000 புத்தகங்களை வாங்கி வைத்துள்ளதாக கூறினார். ஊருக்கு வெளியில் தனி இடம் வாங்கி வைத்து இருக்கேன் அங்கு எனது ஓய்வு காலத்தை புத்தகங்கள் உடன் செலவு செய்ய விரும்புகிறேன் என்றார்.அதுபோல நானும் ஓய்வுக்கு பிறகு நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. அதற்காக வேள்பாரி புத்தகத்தை எடுத்து வைத்துள்ளேன்.

வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல சு.வெங்கடேசனின் சிரிப்பு உள்ளது.  ஊமைத் தேவன் குறித்து எழுத வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது என சு.வெங்கடேசன் கூறினார். கம்யூனிஸ்டுகளுக்கு என ஒரு சித்தாந்தம், கொள்கை, சட்டம் உள்ளது. டி.கே.ரங்கராஜன் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. டெல்லியில் அவரை சந்திக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேசுவதையெல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும். மதுரையில் சு.வெங்கடேசனை நிற்க வைத்து வெற்றிப் பெற வைத்ததற்காக கம்யூனிஸ்டு தோழர்களை பாராட்டுகிறேன். பாரி, வாரி வாரி அளிப்பது போல் வெற்றியை அளித்துள்ளனர்.

1962 ஆம் ஆண்டு அண்ணா, கலைஞர் தேர்தலில் நிற்கிறார்கள். அண்ணா எவ்வளவு பெரிய ஆளுமை, பேச்சாளர் பெருந்தலைவர் அவருக்கு முன்னாள் கலைஞர், நெடுஞ்செழியன் என யார் பேசினாலும் அதனை அண்ணாவின் பேச்சு மறக்கடித்துவிடும். அத்தகைய அண்ணாவே தேர்தலில் தோற்றார். கலைஞர் வெற்றிப் பெற்றார். அதற்கு காரணம் பராசக்தி, மனோகரா, மந்திரகுமாரி ஆகிய படங்கள்தான்.

தமிழ்மக்கள் எந்த வகையிலும் கலையை ரசிப்பதில் மன்னர்கள். சாதி, மத, மொழியை கடந்து தமிழ் மக்கள் கலையை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதற்காக தமிழர்களின் காலில் விழுந்து வணங்குகிறேன்” எனத் தெரிவித்தார்.

வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

இதன் பின்னர் இறுதியாக பேசிய வேள்பாரி நாவலின் ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியுமான சு.வெங்கடேசனின் மேடைபேச்சு, ”இந்த நிகழ்ச்சி வேல் பாரியின் வெற்றி விழா மட்டுமல்ல. இந்த சமூகம் திறன் பேசியதற்குள் மூழ்கவில்லை, சரியான புத்தகத்தை கொடுத்தால் அதை படிக்க லட்சம் வாசகர்கள் உள்ளார்கள் என்பதை உரக்கச் சொல்லும் ஒரு விழா.

ஆன்மீகம், சமையல் குறித்த நூல் விற்பதில் ஆச்சரியமில்லை. ஒரு நல்ல இலக்கியம் கொடுத்தால் அதை எவ்வளவு தூரம் எடுத்துச் செல்வார்கள் என்பதற்கு வேள்பாரி ஒரு உதாரணம். விழுமியங்களை மதிப்பவர்கள் இப்போது யாரும் இல்லை, அறத்தை போற்றுபவர்கள் யாரும் இல்லை இன்று பேசிக் கொண்டிருக்கும் சூழலில் அறத்தை பேசும் நாவலை கொண்டாடுகிறார்கள்”எனத் தெரிவித்தார்.

வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன்,” இயற்கையை நேசிக்கும், தமிழை நேசிக்கும், வாழ்க்கையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் வேள்பாரி கதை பிடிக்கும். 2000 ஆண்டு பழமையான கருப்பொருளை இன்றைய உலகத்தில் பேச வேண்டிய விஷயத்தை இந்தக் கதை பேசுகிறது.

இயற்கைக்கும் மனிதப் பேராசைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தின் ஆதி வடிவம் தான் வேள்பாரியின் கதை என்று குறிப்பிட்டேன். இன்றைக்கு நடக்கும் எல்லாப் போராட்டத்திற்குமான அடிப்படையைப் பற்றி பேசும் நாவல் இது. அதனால்தான் குறுகிய காலத்தில் ஒரு லட்சம் பிரதிகளை விற்றுள்ளது. அதுதான் இத்தனை ஆயிரம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பெயர் சூட்டியுள்ளதும், இவ்வளவு புத்தகங்கள் விற்று உள்ளதும் காரணம்.

இது அறத்தைப் பேசுகிற இலக்கியம். அறம் பேசும் இலக்கியத்தைக் கொண்டாடியது வாசகத் தளத்திற்கு கிடைத்த வெற்றி. பழங்குடி சமூகம் அழிந்து உடமைச் சமூகம் உருவாகிற போது நடக்கிற போராட்டம் தான் வேள்பாரி கதையின் மையப்பகுதி. கால மாற்றத்தில் சில விஷயங்கள் மாறும், ஆனால் சில, என்றைக்கும் மாறாது.

வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், துக்கத்தில் ஒரு துளி கண்ணீர் விழும். அதுதான் இயல்பு. காலம் காலமாக மாறாத பண்புகள், விழுமங்களைப் பேசுவதால் என்றைக்கும் விரும்பப்படுகிற நாவலாக இருக்கிறது. வேள்பாரி போன்று இன்னொரு நாவலை எழுதுவதற்கு காலப்பரப்பும், இடைவெளியும் தேவை. மன அளவில் அதற்கான தயாரிப்பும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கும். உங்களைப் போல நானும் ஆர்வத்தோடு இருக்கிறேன்.

எல்லா காலத்திற்கும் பொருந்துகிற அறங்கள் உண்டு. வேள்பாரியை நீங்கள் ஒரு முறை படித்து விட்டால் அந்த உலகமே தனி. அந்தப் புத்தகத்தின் வாசகர்கள் இவ்வளவு கொண்டாட காரணம், அதில் போலியான விஷயங்கள் எதுவும் இல்லை.

வேல் பாரி நாவலை திரைவடிவமாகக் சவாலை அதை எடுக்கும் கலைஞர்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். அந்தச் சவாலில் வெற்றிபெறும்போது மிகச் சிறந்த படமாக அமையும். மகாபலிபுரம் மட்டுமல்ல, எந்த ஒரு வரலாற்று இடமும் பாதுகாக்கப்பட வேண்டும். வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் எந்த சிரமமும் உருவாக்கக்கூடாது.

காட்டை அழித்து நாடாக்கப்பட்டது என்பது ஆள்பவர்களின் குரல். காட்டை அறிந்து நாடுகள் உருவாக்கப்பட்டது என்பது குடிகளின் குரல். நாம் எப்போதும் குடிகளின் குரலோடு தான் நிற்போம். நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. உலகில் எந்த மொழிக்கு இவ்வளவு வரலாறும், தொடர்ச்சியும் இருக்கும். பழமையான நம் மொழி செறிவான பண்பாட்டை உருவாக்கியிருக்கிறது” எனத் தெரிவித்தார்.வேல்பாரி நாவல் - சாதி, மத, மொழியை கடந்து கலையை ரசிப்பவர்கள் தமிழர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக, வேள்பாரி நாவலின் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்ட குழந்தைகள் உடன் நாவல் ஆசிரியர் சு.வெங்கடேசன், சசிக்குமார், ஓவியர் மணியம் செல்வன்  ஆகியோர் குழந்தைகளுக்கு பரிசு வழங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, சங்ககால இசைக்கருவிகளை மீட்டெடுத்து அவற்றைக் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் உருபாணர் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், மார்க்சிஸ்ச் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், டி.கே.ரங்கராஜன், முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், எம்.பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி, இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்டோர் உடன் வேள்பாரி வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

அடுத்த பிரதமர் அமித்ஷா! வேலை தீவிரம்! அலறும் ஆர்எஸ்எஸ்!

MUST READ