Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வராகியுள்ள விஜய் நல்லாட்சி புரிந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் – பிரேமலதா வாழ்த்துகள்

முதல்வராகியுள்ள விஜய் நல்லாட்சி புரிந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் – பிரேமலதா வாழ்த்துகள்

-

- Advertisement -

தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார்.முதல்வராகியுள்ள விஜய் நல்லாட்சி புரிந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் – பிரேமலதா வாழ்த்துகள்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “விஜய் தற்போது தான் முதல்வராக பொறுப்பேற்று கொண்டு உள்ளார், அவருக்குக் கொஞ்சம் காலஅவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், தாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில் நின்று வெற்றி பெற்றுள்ளதால் திமுகவிற்கு ஆதரவாகவே செயல்படுவதில் உறுதியாக இருப்பதாகவும், முதல்வராக பதவியேற்றிருக்கும் தம்பி விஜய்க்கு கேப்டன் சார்பாக, தேமுதிக சார்பாக வாழ்த்துகள் என்றும் பிரேமலதா தெரிவித்துள்ளாா்.

we-r-hiring

தம்பி விஜய் நேற்று தானே பதவியேற்றிருக்கிறார். கட்டாயம் அவருக்கான நேரத்தை நாம் தருவோம். அண்ணன் ஸ்டாலினும் அதை தான் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு மக்கள் பிரச்னைகளை, தமிழ்நாட்டின் பிரச்னைகளைப் பற்றி பேசுவோம். தமிழகத்திற்காகவும் தமிழக மக்களுக்காகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம். வரும் நாள்களில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதை பார்த்து அதற்கேற்ப எங்களது செயல்பாடுகள் இருக்கும் என்றார். தவெக தலைவர் விஜய் நல்லபடியாக ஆட்சி செய்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தின் 17-ஆவது சட்டமன்ற தொடக்க விழாவில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து முதன்முறையாக எம்.எல்.ஏவாகத் தேர்வாகி உள்ள பிரேமலதா விஜயகாந்த் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவையில் இருந்த முதலமைச்சா் விஜய் முன்னிலையில் அவர் பொறுப்பேற்றபோது, முதல்வா் விஜய் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா, மது போதையை ஒழிக்க போர்க்கால நடவடிக்கையை புதியஅரசு எடுக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

MUST READ