Homeசெய்திகள்தமிழ்நாடுசாதி மதம் இல்லாத சமத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும் – அம்பேத்தகரின் 135வது பிறந்தநாளில் டி.ராஜா...

சாதி மதம் இல்லாத சமத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும் – அம்பேத்தகரின் 135வது பிறந்தநாளில் டி.ராஜா பேச்சு…

-

- Advertisement -

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, ”சாதி மதம் அற்ற சமத்துவ இந்தியாவை உருவாக்குவதே அம்பேத்கரின் நோக்கம். எனவே நாம் அனைவரும் ஒன்று திரண்டு அவரின் உயரிய நோக்கத்திற்கு உயிர்கொடுக்கும் வகையில் உறுதி ஏற்ப்போம் என்று கூறிய டி.ராஜா, அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது திருஉருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினாா்.சாதி மதம் இல்லாத சமத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும் – அம்பேத்தகரின் 135வது பிறந்தநாளில் டி.ராஜா பேச்சு…

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை எம் சி ராஜா மாணவர் விடுதி வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், இன்று அரசியல் சாசன சட்டம் வலதுசாரி பிற்போக்கு சக்திகளால் அச்சுறுத்தப்பட்டு வரும் சூழலில் அம்பேத்கரின் கொள்கைகளை பாதுகாக்க வேண்டிய தேவை அனைவருக்கும் உள்ளது என்றார். 18 வயது அடைந்த அனைவருக்கும் வாக்குரிமையை அம்பேத்கர் பெற்று தந்ததாகவும், இந்தியாவை சாதிமத வேறுபாடற்ற சமுதாயமாக உருவாக்க வேண்டும் என்று போராடிய முதல் போராளி  அம்பேத்கர் என்றார்.

சாதி மதம் இல்லாத ஒரு சமத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நினைத்த அம்பேத்கரின் நோக்கத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று தெரிவித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் மையம் கலைக்குழு சார்பில் பறை இசைத்தும் , முழக்கங்கள் எழுப்பியும் மரியாதை செலுத்தினர்.

தமிழர்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் – டி.டி.வி.தினகரன்

MUST READ